தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு இன்று நடைபெறும் நிலையில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் காலை முதல் தொண்டர்கள் படையெடுத்து திரண்டு வருகிறார்கள். தற்போதைய மாநாடு நடைபெறும் இடத்தில் 90% இருக்கைகள் நிரம்பிவிட்டது. மொத்தம் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு நாற்காலிகள் போடப்பட்டிருந்த நிலையில் லட்சக்கணக்கானோர் மாநாட்டில் ‌ திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 14ஆம் தேதி தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் மாநாடு நடைபெறும் போது விக்கிரவாண்டியில் மழை பெய்யுமா அல்லது பெய்யாதா என்ற சந்தேகம் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் தற்போது தொண்டர்களை மகிழ்ச்சி படுத்தும் விதமாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. மேலும் அதன்படி இன்று மாநாடு நடைபெறும் இடத்தில் வெப்பநிலையே நிலவும் என்றும் மழை பெய்யாது என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.