தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் கட்சியில் மாவட்ட செயலாளர்களை நியமித்து வருகிறார். மொத்தம் 120 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவித்த நிலையில் அது குறித்து அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகிறது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் சிறப்பாக சஜி என்பவருக்கு நடிகர் விஜய் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பை வழங்கினார்.

இவர் சென்னையில் வருகிற 28ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்ட த்தில் கலந்து கொள்வதற்காக  சென்றபோது திடீரென மரணம் அடைந்தார். மேலும் பெரும் கனவுகளுடன் தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கிய சஜி மரணமடைந்தது தமிழக வெற்றிக்கழகத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.