நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் அதில் உள்ள யானை தொடர்பாக எழும் சர்ச்சைகள் குறித்து பேசினார். அவர் கூறியதாவது, யானை சின்னத்தை வைத்துக்கொள்ள தம்பி விஜய்க்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அதன்பிறகு என்னை பற்றி பேசி சோர்ந்து போனவர்கள் தற்போது என் தம்பி விஜயை பற்றி பேசி வருகிறார்கள். எனக்கு ஆதரவாக பேசுவதற்கு வேறு யாரும் இல்லை என கூறிய அவர் என் தம்பிக்காக பேச நான் இருக்கிறேன் என்றார்.

அதன் பிறகு கூட்டணி தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான் கூட்டணி தொடர்பாக விஜய் தான் அறிவிக்க வேண்டும் என்றார். அதோட செப்டம்பர் 22ஆம் தேதிக்கு பிறகு கூட்டணி தொடர்பாக விஜய் அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறினார். மேலும் இதன் மூலம் தமிழக வெற்றி கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி கூட்டணி உறுதி என்பது போல் சீமான் மறைமுகமாக கூறியுள்ளார். ஏற்கனவே இளைஞர்கள் பலர் நாம் தமிழர் கட்சியின் பின்னால் செல்வதாக கூறப்படும் நிலையில் தற்போது விஜய் மற்றும் நாம் தமிழர் கட்சி இணைந்தால் தமிழக அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.