தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான பலப்பரீட்சை உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் மீது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்துள்ள “போர்ஜரி” புகார் மாநிலத்தையே உலுக்கியுள்ளது.

மன்னார்குடி அமமுக எம்.எல்.ஏ. காமராஜ், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட கடிதம் முற்றிலும் போலியானது எனக் கூறி, கிண்டி காவல் நிலையத்தில் டிடிவி தினகரன் அதிரடியாகப் புகார் அளித்துள்ளார். “எங்கள் எம்.எல்.ஏ-வின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு, ஆளுநரை ஏமாற்ற விஜய் தரப்பு துணிந்துவிட்டது” எனத் தினகரன் தரப்பு சீறுவதால், இந்த விவகாரம் இப்போது போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றுள்ளது.

தவெக வெளியிட்ட வீடியோ ஆதாரத்தைத் தினகரன் தரப்பு ஏற்க மறுத்துள்ள சூழலில், இந்த ‘கடித யுத்தம்’ விஜய்யின் முதலமைச்சர் கனவுக்குப் புதிய சட்டச் சிக்கல்களை ஏற்படுத்துமா அல்லது தினகரனின் அரசியல் வியூகமா என்பது தெரியாமல் தமிழகமே திக் திக் நிமிடங்களில் உறைந்து போயுள்ளது.