
தமிழக வெற்றி கழகத்தின் கொடி மற்றும் கட்சி பாடல் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை கட்சியின் தலைவர் விஜய் சென்னை பனையூர் அலுவலகத்தில் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் தமிழக வெற்றி கழக கொடியில் யானை படம் மற்றும் வாகை மலர் இடம்பெற்றுள்ளது. இதனை தற்போது உடனடியாக நீக்குமாறு பகுஜன் சமாஜ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதாவது தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் யானை. இந்த சின்னத்தை கட்சி கொடியில் வைத்தது தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படி தவறு என்பதால் உடனடியாக அந்த சின்னத்தை கட்சி கொடியிலிருந்து நீக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. உடனடியாக அந்த சின்னத்தை நீக்க விட்டால் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்படும் என்றும் பிஎஸ்பி எச்சரித்துள்ளது. மேலும் இது தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது