அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று (ஜூலை 7) ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய அவர், தவெக ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நீடிக்காது என்றும், வெறும் கவர்ச்சியை நம்பி மக்கள் வாக்களித்துவிட்டார்கள் என்றும் அதிரடியாகக் குற்றம் சாட்டினார். மேலும், அரசியலில் தேர்தல் வெற்றி தோல்வி என்பது மிகவும் சகஜமான ஒன்றுதான் என நிர்வாகிகளுக்கு அவர் ஆறுதல் கூறினார்.

​தொடர்ந்து பேசிய இபிஎஸ், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் நாம் முழுமையாக வெற்றி பெற்றால், மீண்டும் மாநில ஆட்சியை எளிதாகப் பிடித்துவிடலாம் என்று தொண்டர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார். அதனால், உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் தேர்வில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், கட்சிக்கு உண்மையாக உழைக்கக்கூடிய விசுவாசமானவர்களை மட்டுமே வேட்பாளர்களாகப் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு அவர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.