தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜயுடன் சேர்ந்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தார். இவர் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பணிகள் முடிவடைந்ததும் தெறி படத்தில் ஹிந்தி ரீமேக்கை அட்லீ இயக்க இருக்கிறார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு தளபதி விஜய், நடிகை சமந்தா, ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளிவந்த தெறி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது அதன் ஹிந்தி ரீமேக் உருவாக இருக்கிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் வருண் தவான் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். மேலும் கிட்டத்தட்ட இந்த தகவல்கள் உறுதியான நிலையில் ஜவான் படத்தின் வேலைகள் முடிவடைந்ததும் அட்லீ தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் பணிகளை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.