தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கு இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கியுள்ள நிலையில் 2026 தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அவரது கட்சி போட்டியிடுகிறது.
இந்த நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை எச். வினோத் இயக்கும் நிலையில் அனிருத் இசை அமைக்கிறார். அரசியல் கட்சி தொடங்கியதால் இது நடிகர் விஜயின் கடைசி படம் இதோடு அவர் சினிமாவை விட்டு விலகுகிறார். இதன் காரணமாக ஜனநாயகன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாம் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனநாயகன் படத்தின் இரண்டாவது பாடல் டிசம்பர் 18ஆம் தேதி வெளியாகும். மேலும் இதனை பட குழு போஸ்டர் வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளது.
