தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உட்கட்சி விவகாரங்கள் மற்றும் கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், அக்கட்சியின் முக்கியப் புள்ளியான ஆதவ் அர்ஜுனா குறித்துப் புதிய குற்றச்சாட்டு ஒன்று கிளம்பியுள்ளது.

லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகனான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தனது மைத்துனர் ஆதவ் அர்ஜுனா குறித்துப் பேசுகையில், “அவர் திமுக-வின் ஸ்லீப்பர் செல்லாகச் செயல்பட்டு வருகிறார்” என அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளார்.

“விஜய் இன்னும் உண்மையை உணரவில்லை; ஆதவ் அர்ஜுனா போன்ற நபர்களை நம்புவது கட்சிக்கு ஆபத்து” என்று எச்சரித்துள்ள அவர், இது தொடர்பாகத் தளபதி விஜய் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏற்கனவே விசிக-வில் இருந்து வெளியேறி விஜய்யுடன் இணைந்த ஆதவ் அர்ஜுனா, தவெக-வின் முக்கிய வியூகங்களை வகுப்பவராகப் பார்க்கப்படும் நிலையில், அவரது சொந்தக் குடும்ப உறுப்பினரே இப்படி ஒரு ‘ஸ்லீப்பர் செல்’ புகாரைக் கிளப்பியுள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.