
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடந்த மாதம் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆகி 300 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆர் மேக்ஸ் மீடியா இந்தியா நிறுவனம் மாதம் தோறும் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பிரபலமாக இருக்கும் நடிகர் நடிகைகளின் பட்டியலை வெளியிடும்.
அந்த வகையில் கடந்த மாதம் இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களின் பட்டியலை ஆர் மேக்ஸ் மீடியா இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலின்படி இந்திய அளவில் தளபதி விஜய் தான் பிரபலமான நடிகர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அதன் பிறகு பல மாதங்களாகவே நடிகர் விஜய் பிரபலமான நடிகர்களில் தன்னுடைய முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். அதன் பிறகு இரண்டாம் இடத்தில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனும், மூன்றாம் இடத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும், நான்காம் இடத்தில் பாகுபலி முதல் பிரபாஸும், ஐந்தாம் இடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாரும் இருக்கிறார்கள்.
இதனையடுத்து ஆறாம் இடத்தில் நடிகர் சூர்யாவும், ஏழாம் இடத்தில் ஆர்ஆர்ஆர் புகழ் ஜூனியர் என்டிஆரும் , எட்டாம் இடத்தில் தல அஜித் குமாரும், ஒன்பதாம் இடத்தில் தெலுங்கு நடிகர் ராம்சரணும், பத்தாமிடத்தில் கே ஜி எஃப் புகழ் யஷ்ஷும் இருக்கிறார்கள். மேலும் நடிகர் விஜய் முதலிடத்தில் பிடித்துள்ளதால் வழக்கம்போல் தளபதி விஜய் மற்றும் தல அஜித் ரசிகர்களிடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.
Ormax Stars India Loves: Most popular male film stars in India (Jan 2023) #OrmaxSIL pic.twitter.com/Wv34eDU5uJ
— Ormax Media (@OrmaxMedia) February 21, 2023