ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் “துணிவு” படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்த படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அதேபோல் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் “வாரிசு” படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இத்திரைப்படம் வரும் ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அஜித் நடித்துள்ள துணிவு, விஜய் நடித்துள்ள வாரிசு ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகிறது. இதற்கிடையில் சில திரையரங்கில் இரண்டு படங்களுமே வெளியாவதால் பிளக்ஸ் வைப்பதில் ரசிகர்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் முந்திக்கொண்டு இடம் பிடிப்பதற்காக சுவற்றில் மார்க் செய்தும், பேப்பரில் எழுதி ஒட்டியும் பிளக்ஸ் வைப்பதற்கு இடம் பிடிக்கின்றனர்.