தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்ற பகுதியில் முதல் மாநாட்டினை நடத்தை கட்சியின் கொள்கைகள் மற்றும் அரசியல் கட்சி ஆரம்பித்ததன் நோக்கம் கொள்கை மற்றும் கொள்கை தலைவர்கள் போன்றவற்றை நடிகர் விஜய் அறிவித்தார். இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 8 லட்சம் பேர் வரை கலந்து கொண்டனர். நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் நிலையில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அதன்பிறகு நடிகர் விஜய் திமுகவை நேரடியாக அரசியல் எதிரி என்று அறிவித்த நிலையில் பாஜகவை கூட மறைமுகமாக விமர்சிக்கிறார். இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு விஜய் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய சவாலாக இருப்பார் என்று கூறப்படுகிறது. நடிகர் விஜயின் அரசியல் வருகை மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியுள்ள நிலையில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் எந்த அளவுக்கு அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் ஒரு தலைவனுக்கு வேண்டிய முக்கிய 3 குணங்கள் பற்றி ஒரு நிகழ்ச்சியின் போது நடிகர் வடிவேலு பாட்டாக பாடுகிறார்.அவர் பொதுவாக இந்த பாட்டை பாடிய நிலையில் அந்த நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டிருந்ததால் விஜயை குறிப்பிட்டு தான் அந்த பாடலை பாடுவது போன்று தற்போது தளபதி ரசிகர்கள் அந்த வீடியோவை வைரலாகி வருகிறார்கள்.

அதாவது அந்த வீடியோவில், கருணை இருந்தால் வள்ளலாகலாம், கடமை இருந்தால் வீரன் ஆகலாம், பொறுமையாக இருந்தால் மனிதனாகலாம். மேலும் இந்த மூன்றும் இருந்தால் தலைவனாகலாம் என்று வடிவேலு பாட்டு பாடிய நிலையில் அதனை விஜயை வைத்து எடிட் செய்து அவருடைய ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்.