இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப் பிராணிகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதன்படி தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில் நாயும் பூனையும் விளையாடிக் கொண்டிருக்கின்றன. அதில் நாய் ஒன்று தலையணையை வைத்து பூனையை அமுக்குவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.