
கேரளா மாநிலம் திரிப்புனிந்துரா எனும் பகுதியில் சுஜித் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காவல்துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்பு சுஜித் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இதனையடுத்து அவரது வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அவர் ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்யுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் அவரைப் பிடிப்பதற்கு பெண் காவல் அதிகாரி கிருஷ்ணா திட்டமிட்டார். அதன்படி அவர் மாறுவேடத்தில் தொடர்ந்து அவரை கண்காணித்து வந்த நிலையில் சுஜித் ஆட்டோவில் செல்வதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து ஆட்டோ வரும் வழியில் அந்த பெண் அதிகாரி காத்திருந்தார். பின்னர் சட்டென ஆட்டோவை நிறுத்தி உள்ளே சென்ற அவர் அதன்பின் அவரது இரண்டு கைகளையும் துணியால் கட்டிய நிலையில் அவரை அழுத்தமாக பிடித்துக்கொண்டார்.
பின்னர் ஆட்டோ ஓட்டுனரிடம் ஆட்டோவை காவல் நிலையத்திற்கு கொண்டு சொல்லுமாறு கூறினார். அதன்படி ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையத்திற்கு சென்றார். இதைத்தொடர்ந்து சக காவல்துறைனர் அங்கு வந்து சுஜித்தை பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அதன்பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் பெண் அதிகாரி ஒருவர் சினிமா பாணியில் குற்றவாளியை அதிரடியாக பிடித்த சம்பவம் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.