சென்னை மாவட்டம் பெரம்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு இளம் பெண்ணும் நெருங்கிய தோழிகள். இருவரும் தனியார் நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். கடந்த 27ஆம் தேதி இரண்டு பெண்களும் நுங்கம்பாக்கத்தில் உள்ள விடுதி ஒன்றில் இரண்டு அறைகளை புக் செய்து தங்கி இருந்தனர்.

அப்போது இருவரும் மது அருந்தி கொண்டிருந்த போது பெரம்பூரைச் சேர்ந்த பெண் தன்னுடைய ஆண் நண்பர்கள் இருவருக்கு போன் செய்து விடுதிக்கு வருமாறு கூறினார். பின்பு நான்கு பேரும் அறைக்கு சென்று அங்கு வைத்து மது அருந்தினர். நான்கு பேருக்கும் போதை அதிகமானதால் ஒரே அறையில் ஒன்றாக படுத்து தூங்கினர்.

வேலூரைச் சேர்ந்த இளம்பெண் சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்தபோது அவரது ஆடைகள் கலைந்தவாறு கிடைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் அருகில் பார்த்தபோது மதுபோதையில் இருந்த அந்த ஆண் நண்பர் அருகில் தூங்கிக் கொண்டிருந்தார். அதன்பின்பே அந்த ஆண் நண்பர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது அந்த பெண்ணுக்கு தெரியவந்தது.

எனவே பாதிக்கப்பட்ட  பெண் பெரம்பூர் பெண்ணிடம் சண்டை போட்டுவிட்டு ஊருக்கு சென்று விட்டார். ஊருக்கு சென்ற அந்தப் பெண் தன் தாயிடம் நடந்ததை கூறியுள்ளார். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் தாய் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில் அவர்கள் அரசுத் துறையில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வந்தனர் என்பது தெரியவந்தது. எனவே இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.