உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பண்டா பகுதியில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது அந்த பகுதியில் அசோக் என்ற ஒரு 35 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.
அந்த வகையில் நேற்று மது குடித்துவிட்டு சைடு டிஸ்ட்க்கு எதுவும் இல்லாததால் உயிரோடு சென்ற ஒரு பாம்பை பிடித்து வாயில் வைத்து கடித்து சாப்பிட்டுள்ளார். இவர் பாம்பை மென்று சில துண்டுகளை விழுங்கிய நிலையில் அவர் கடித்து சாப்பிட்டதை திடீரென குடும்பத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவரை அருகில் இருந்த ஒரு சுகாதார மையத்திற்கு அழைத்து சென்ற நிலையில் குடிபோதையில் வீட்டின் அருகில் சுற்றி திரிந்த ஒரு பாம்பை பிடித்து சாப்பிட்டது தெரியவந்தது. அவர் மெல்ல மெல்ல அதனை சாப்பிட்ட நிலையில் அசோக்கின் தாயார் அதனை பார்த்து அலறிய நிலையில் பின்னர் தன் மகனின் வாயிலிருந்து அதனை அகற்றினார். இருப்பினும் அதன் இரண்டு துண்டுகளை அவர் சாப்பிட்டுவிட்டார்.
தற்போது அசோக்கின் உடல்நிலை மிகவும் சீராக இருப்பதாகவும் அந்த பாம்பிற்கு விஷம் இல்லாததால் அவர் உயிர் பிழைத்ததாகவும் டாக்டர்கள் கூறியுள்ளனர். மேலும் அசோக்கு மருத்துவமனையில் சோகமாக அமர்ந்திருக்கும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
बांदा-शराबी ने नशे में सांप को बनाया अपना निवाला, अखिलेश ने सांप के बच्चे को मुंह से निगला
परिजनों ने युवक को सीएचसी बबेरू पहुंचाया, डॉक्टर भी चौंके, युवक का इलाज शुरू किया, बबेरू कोतवाली क्षेत्र के हरदौली गांव का मामला#Banda pic.twitter.com/mMwk3u0vy7
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) July 16, 2025
