சமூக ஊடகங்களில் சமீபகாலமாக காட்டுத்தீயாய் பரவி வரும் ஒரு பிரபலமான வார்த்தை தான் “இன்ஸ்டன்ட் கர்மா காலேஷ்”. ஒரு நபர் அடுத்தவருக்கு வேண்டுமென்றே தீங்கிழைக்க முயலும் போதோ, அல்லது பொதுவெளியில் அநாகரிகமாக நடந்து கொள்ளும் போதோ, அதற்குரிய தண்டனை அல்லது விளைவு அடுத்த சில நொடிகளிலேயே அவர்களுக்குக் கிடைத்துவிடுவதைத்தான் இது குறிக்கிறது.

மேலும் ஒருவர் செய்யும் தவறுக்கான பலனை, காலதாமதம் இன்றி அதே இடத்தில் இயற்கையோ அல்லது சுற்றியிருப்பவர்களோ உடனடியாகத் திருப்பித் தரும் போது, அது பார்ப்பவர்களுக்கு ஒருவித விசித்திரமான நீதியையும் மனநிறைவையும் தருகிறது.

“>

இத்தகைய சுவாரசியமான மோதல்களும், கணநேர கர்மாக்களும் வீடியோக்களாகப் பதிவு செய்யப்பட்டு எக்ஸ் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் “பக்கங்கள்” வழியே நெட்டிசன்களால் அதிகம் ரசிக்கப்படுகின்றன.

இந்நிலையில் தவறு செய்பவர்கள் உடனடியாகத் தங்களின் செயலுக்கான பலனை அனுபவிப்பதைப் பார்க்கும் போது, அது பார்ப்பவர்களுக்கு ஒரு தார்மீக திருப்தியைத் தருவதோடு மட்டுமல்லாமல், “நாம் விதைத்ததே நம்மை வந்தடையும்” என்ற எளிய வாழ்வியல் உண்மையையும், விழிப்புணர்வையும் நையாண்டியுடன் சமூகத்திற்கு உணர்த்துகிறது.