ஆப்கானிஸ்தானில் 2021 ஆம் ஆண்டு தலிபான் ஆட்சி அமைந்ததிலிருந்து, பெண்கள் மீதான அடக்குமுறைகளும், கடுமையான கட்டுப்பாடுகளும் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் இணைய சேவை திடீரென முடங்கியதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி, இணைய வசதியை பயன்படுத்தும் இளைஞர்களும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தலைநகர் காபூலில் இணைய சேவை வழங்கும் நிறுவனம் சார்பில், பூமிக்கடியில் பதிக்கப்பட்டிருந்த ஒளியியல் இழைகள் (ஆப்டிகல் பைபர் வயர்கள்) சேதமடைந்ததே இதற்குக் காரணம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமையை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அதேசமயம், இந்த விவகாரத்தில் ஆளும் தலிபான் அரசின் தலையீடு இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.