தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 50 வயதிற்கும் மேல் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. முழு உடல் பரிசோதனைக்காக ஒரு ஆசிரியருக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 16 வகையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 1,06,985 ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள். தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு ஆசிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.