ஒன்றரை ஆண்டுகளாகியும் பணப்பலன்கள் கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி காஞ்சிபுரம் போக்குவரத்து பணிமனை முன்பு ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் தமிழ்செல்வன் என்பவர் 37 ஆண்டுகளாக வேலை பார்த்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் ஆண்டு தமிழ் செல்வன் ஓய்வு பெற்றுள்ளார். மேலும் இன்று வரை அவருக்கான பணம் பலன்கள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து தமிழ் செல்வன் காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மாவட்ட ஆட்சியர், போக்குவரத்து கழக அதிகாரிகள், தமிழக அரசு என அனைவருக்கும் தமிழ்செல்வன் கடிதம் எழுதி உள்ளார். மேலும் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் போக்குவரத்து பணிமனை முன்பு ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.