போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி பரபரப்பை கிளப்பிய ஜான் பிரிட்டோ, தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய புள்ளியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனாவின் உறவினர் கிடையாது என்று அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் அதிரடியாக விளக்கம் அளித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக சோசியல் மீடியாவில், “ஜான் பிரிட்டோ என்பவர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியாரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான லீமா ரோஸின் சொந்த தம்பிதான்” என்று காட்டுத்தீயாய் ஒரு தகவல் பரவி வந்தது.

அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பிய இந்த விவகாரத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள், “அப்படி பரப்பப்படும் செய்திகள் எல்லாமே வெறும் வதந்திதான்; அவர்களுக்கிடையே எந்தவிதமான குடும்ப உறவும் இல்லை” என்று திட்டவட்டமாக தெளிவுபடுத்தியுள்ளனர்