
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம்- சிதம்பரம் சாலையில் ஒரு கார் தாறுமாறாக ஓடியது. இந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் சென்ற இரண்டு பேரின் மீது மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் கார் ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை சமாதானப்படுத்தி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.