ஐபிஎல் 2026 தொடரில் தனது அதிரடி பேட்டிங்கால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ள 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, விமான நிலையத்தில் சிறுவர்களுடன் செய்த குறும்பு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷி விமான நிலையத்தில் அமர்ந்திருந்தபோது, இரண்டு சிறுவர்கள் அவரோடு செல்ஃபி எடுக்க ஆர்வத்துடன் அணுகினர். அப்போது அவர்களிடம் விளையாட்டாகப் பேசிய வைபவ்,

“தம்பி, நான் போட்டோ எடுக்க காசு வாங்குவேன். ஒரு போட்டோவுக்கு 100 ரூபாய் கொடுத்தால் தான் செல்ஃபி எடுப்பேன். கொடுப்பீர்களா?” என்று மிக சீரியஸாகக் கேட்டுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் தயங்கி நின்றபோது, “விளையாடினேன் தம்பி.. வாங்க போட்டோ எடுக்கலாம்” என்று கூறி அவர்களை அழைத்து அழகாகப் போஸ் கொடுத்துள்ளார். இந்த கியூட் வீடியோ தற்போது ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

 

மைதானத்திற்கு வெளியே குறும்புக்காரராக இருக்கும் வைபவ், மைதானத்திற்குள் பேட்டிங்கில் அனல் பறக்க விட்டு வருகிறார். சனிக்கிழமை நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், வெறும் 36 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். நடப்பு தொடரில் இதுவரை 8 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர், 357 ரன்கள் குவித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 234.87 என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆரஞ்சு கேப்  வெல்லும் ரேசில் முன்னணி வீரர்களுக்குப் போட்டியாக 15 வயதிலேயே இந்த இளம் புயல் மிரட்டி வருவது குறிப்பிடத்தக்கது.