தம்பி பாக்க தான் தம்பி நாங்க சின்ன சின்ன ஆளுங்க ஆனா வேலையை ரொம்ப சீரியஸா செய்வோம் என்று சீமான் பேசியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பரப்புரை நடந்து வருகிறது. வாக்குப்பதிவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியின் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் நாதக கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி ஒரு பக்கமும், மாலையில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுக்கூட்டம் மூலமாகவும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது சீமான் பேசுகையில், அதிகாரத்தில் இல்லாமலேயே எங்கே வேணாலும் நீ சிலையை கட்டிப்பார்.

என் விளை நிலைங்களை பறித்து, மலையை அடித்து நொறுக்கி எங்கே நீ எட்டுவழிசலையை நீ போட்டுப்பார். என் மக்களின் வீட்டை இடித்துப்பார். விளைநிலங்களில் ஒரு ஏக்கர் நிலத்தை எடுத்துப்பார். தம்பி பாக்க தான் தம்பி நாங்க சின்ன சின்ன ஆளுங்க. ஆனா வேலையை ரொம்ப சீரியஸா செய்வோம்.  எங்க சொந்தக்காரன் எல்லாம் போலிசாவும், வக்கீலாவும் படிச்சதே எங்களுக்காக தான். உங்களை போல் கொள்ளையடிச்சி ஊரான் சொத்தை அடிச்சி ஒலையில போட்டு, கோடிக்கணக்குல திருடல, நாங்க மக்களுக்காக போராடி ஜெயிக்கிறோம்” என்று பேசியுள்ளார்.