
ஆந்திர மாநிலம், ராஜம்பேட்டை அருகே உள்ள தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் ஆக்கிரமித்து மரங்களை வெட்ட முயன்ற 15 பேரை அதிரடிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 11 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கும்பல் ஏற்கனவே பலமுறை இந்த வனப்பகுதிக்குள் புகுந்து மரங்களை வெட்டிச் சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தீவிர கண்காணிப்பில் இருந்த போலீசார், இன்று அதிகாலையில் இந்த கும்பலை கையும் களவுமாக பிடித்துள்ளனர். அவர்களிடம் இருந்து 4 கார்கள் மற்றும் மரம் வெட்டும் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.