“தமிழ்நாட்டுல 59 வருஷத்துக்கு அப்புறமா நம்ம இரண்டு அமைச்சர்கள் ஆட்சியில் பங்கு பெற்றிருக்கோம், அடுத்ததா ராகுல் காந்தியைப் பிரதமர் ஆக்குறதுதான் நம்ம லட்சியம்; அதனால வர்ற நாடாளுமன்றத் தேர்தல்ல அடிச்சு விளையாடுவோம், நம்பிக்கையோடு இருப்போம் வாங்க!”

என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாணிக்கம் தாகூர் எம்பி  கூறியுள்ளார்.

அவர், தவெக தலைவர் விஜய் தலைமையில் தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சியில் காங்கிரஸ் பங்கு பெற்று வரலாற்றுச் சாதனையை அடைந்துவிட்டதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், வருகிற 29ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் மூத்த தலைவர்கள் முன்னிலையில் முறைப்படி தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளதாக அறிவித்த அவர், தமிழ்நாட்டில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் வென்று ராகுல் காந்தியைப் பிரதமராக்கப் பலமான கூட்டணியுடன் மக்களிடம் செல்லவிருப்பதாகக் கூறியுள்ள இந்த அதிரடிப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

“>