தமிழகத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சேவைகள் தடை இன்றி தொடர்வதற்கு சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதனை சமாளிக்க முதல் கட்டமாக சென்னை போக்குவரத்து துறை ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் எனும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இது இந்தியாவிலேயே முதல் முறை எனவும் கூறப்படுகின்றது. இந்த தொழில்நுட்பம் மூலமாக அவசர கால ஆம்புலன்ஸ் வரும்போது அங்கிருக்கும் சிக்னலில் எச்சரிக்கை செய்யப்படும்.

இதன் மூலமாக வாகன ஓட்டிகளும் சுதாகரிக்க முடியும் என கூறப்படுகிறது. கூட்டமாக பதினாறு சிக்னல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனுடன் 25 ஆம்புலன்ஸ் சேவைகளும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய சேவையால் விபத்தால் ஏற்படும் மரணங்கள் குறையும் எனவும் கூறப்படுகிறது.