
தமிழ்நாட்டில் மது பாட்டில்களின் விலை உயரப்போவதாக சமீப காலமாக தகவல் பரவி வருகிறது. அந்த வகையில் இதுகுறித்து கூடுதல் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் விலை உயர்வு குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டதாகவும், மதுபானங்களின் புதிய விலை உயர்வு பிப்ரவரி முதல் நடைமுறைக்கு வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.
அதன்படி, பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், வோட்கா ஆகிய பாட்டில்களின் விலை குவாட்டருக்கு ரூ.10ம் ஆஃப்க்கு ரூ.20ம் ஃபுல்க்கு ரூ.40 உயரவிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. பிரீமியம் பாட்டில்கள் குவாட்டருக்கு ரூ.20ம் ஃபுல் ரூ.80 வரை எனவும் பீர்களின் விலை ரூ.10 உயரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.