தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் பால் குறைந்த அளவில் விநியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறிப்பாக இன்று காலை முதல் நெல்லை, தூத்துக்குடி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக பால் முகவர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் பால் தட்டுப்பாடு தொடர்பாக அமைச்சர் நாசர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது, நாடு முழுவதும் பால் உற்பத்தி குறைவாக இருப்பதால்தான் தற்போது பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு பால் தட்டுப்பாடு இன்றி முறையாக விநியோகம் செய்யப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக கூறினார்.