தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் விஜயின் முதல் மாநாட்டின் போது அரசியல் எதிரியாக குடும்ப அரசியல் செய்யும் திமுகவையும் கொள்கை எதிரியாக பாஜகவையும் விஜய் அறிவித்தார். அப்போது பேசிய அவர் கரப்ஷன் கபடதாரிகள் கொண்ட குடும்பத்தினர் தான் இன்று நம் தமிழ்நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.

ஆனால் விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பாக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் கலைஞர் கருணாநிதி குடும்பத்தை புகழ்ந்து பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில்தயாநிதி அருள்நிதி கனிமொழி என்று இன்று தமிழ்நாட்டில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் கருணாநிதி குடும்பம் தான் பெயர் சொல்லக்கூடிய ஒரு குடும்பமாக இருக்கிறது என்று கூறினார்.மேலும் இது தொடர்பான இரண்டு வீடியோவையும் எடிட் செய்து தற்போது சோசியல் மீடியாவில் வெளியிட அது மிகவும் வைரலாகி வருகிறது.