சென்னை: மயிலாப்பூர் தொகுதியில் உள்ள தனது வாக்குச்சாவடியில் நடைபெற்ற ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கலந்துகொண்டார்.
இந்த கூட்டத்தில், குறிப்பிட்ட வாக்குச்சாவடிக்கான 440 வாக்குகள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டன. இதில் ஈடுபட்டிருந்த ஒவ்வொரு வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கும் தனித்தனியாக இலக்குகளை முதலமைச்சர் வழங்கினார்.
பின்னர், சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். “எந்த ஷா வந்தாலும், எத்தனை திட்டங்கள் போட்டாலும், டெல்லி பாதுஷா என்ற எண்ணத்துடன் தமிழ்நாட்டுக்கு வந்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியில் எங்களது கருப்பு–சிவப்பு படை தக்க பாடம் புகட்டும்!” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்!” எனவும் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன?
டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்!
தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்!… pic.twitter.com/k6R8qQRPHB
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) December 10, 2025
