தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் தலைவராக இருப்பவர் வெள்ளையன். இவருக்கு தற்போது தீவிர உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை எம் ஜி எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் ஐசியூவில் தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவருடைய உடல் நலம் கவலைக்கிடமானதாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.