தமிழகத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் போக்குவரத்து துறையில் அரசு பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 2000 கூடுதல் அரசு பேருந்துகளை வாங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் முதற்கட்டமாக சென்னையில் 100 மின்சார பேருந்துகளை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக அனைத்து மாவட்டங்களிலும் மின்சார பேருந்துகள்  இயக்கம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பேருந்துகள் பெறப்பட்ட பிறகு தமிழகத்தில் 15 வருடங்கள் பழைய பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.