நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரி வரி வரி வரி வரின்னு சொறிஞ்சு எடுக்கிறான். ஒரு தம்பிகிட்ட  என்னப்பா…. வீடு கட்டனும் என்று சொன்னியேப்பா…என கேட்டேன்.  ஆமாம் அண்ணே… கட்டிட்டு இருக்கேன்.கம்பிக்கு வரி, சிமெண்டுக்கு வரி, செங்கலுக்கு வரி,  சுண்ணாம்புக்கு வரி.  அப்புறம் எல்லாத்துக்கும் வரி….  கடைசியா வரி  தான் கட்ட முடியும். வீடு எங்க கட்ட முடியும்? உலகத்துல இப்படி வரி போட்டு வசூலித்த நாடு இதான்.  வரியைப் பெற்று தன் குடிகள் கிட்ட பொருளாதாரத்தில் மேம்பட்டு விட முடியும் என்று ஒரு நாடு நம்புதே…

பிரிட்டனில் தான் வரி இருக்குது. நூறு ரூபாயில் 70 ரூபாய் எடுத்துக்குவான். அந்த 70 ரூபாய் திருப்பிக் கொடுத்து விடுவான்…  எப்படி கொடுப்பான் ? சிறந்த கல்வி, சிறந்த மருத்துவம்,  தூய குடிநீர். கழிவறைல போய் திருகுணா…. அதுல கூட குடிநீர் வரும். நல்ல பாதை பயணிக்க….  அருமையா வச்சி இருப்பான். நீ மீதி 30 ரூபாய்  வச்சிருக்கல நூறு ரூபாயில்…  அதை நீ செலவழிக்க தேவையில்லை. எல்லாமே  அவன் தந்துருவான். ஏன் ? அது நாடு. இது சுடுகாடு.

உலகத்துல அறிவை வளர்க்கும் கல்வி…. உயிரை காக்கும் மருத்துவம்… உலக உயிர்களின் உயிர் தேவையா இருக்கும் குடிநீர், தண்ணீர்….. ஒரு வியாபார பொருளாக மாறிவிட்ட தேசம் தேசமே அல்ல, நாடே அல்ல, அது நரகம்… அது சுடுகாடு. கல்வி என்பது மானுட உரிமை. அதைக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அதைக் கொடுக்காமல் இருப்பது எவ்வளவு பெரிய கொடுமை என்று யோசித்து பார்த்துக்கோங்க. அவன் தர மாட்டான்.

என்னைய கேட்பான்… நான் ஆட்சிக்கு வந்தேன்னா… கல்வி இலவசமாக்குவேன்,  மருத்துவத்தை இலவசமாக்குவேன், அதிமேதாவிகள் இருக்காங்க இல்ல… இந்த அரை மெண்டல்.அது ஏற்கனவே இலவசமாக தான் இருக்கு. இலவசமா இருக்கு…. எந்த அமைச்சர் புள்ளை அதுல படிக்குது ? எந்த சட்டமன்ற உறுப்பினர் மகன் அங்க படிக்கிறான் ? எந்த பாராளுமன்ற உறுப்பினர் மகன் அங்க படிக்கிறான் ? அரசு மருத்துவமனை இலவசமாக இருக்குது…

ஏன் செந்தில் பாலாஜிக்கு உடம்பு முடியலன்னு காவிரிக்கு தூக்கிட்டு போனே ? ஏன் ஐயா கருணாநிதிக்கு முடியலன்றதும் ராமச்சந்திரா கொண்டு போனீங்க ?  காவிரி கொண்டு போனீங்க ? ஏன் அம்மையார் ஜெயலலிதாவுக்கு முடியலன்னதும் அப்போலோ கொண்டு போனீங்க ? ஏன்னா… தரமா இல்ல. நாங்க சொல்லுவது அனைவருக்கும் சரியான… சமமான…. தரமாக கல்வி இலவசம்.

நாட்டின் முதல் குடிமகனுக்கு என்ன மருத்துவமோ,  அது கடை கோடி மகனுக்கும் மருத்துவம், அதுதான் மாறுதல். தேர்தல் வருது… ஒரு மாறுதல் வருதா ? ஒரு ஆறுதல் வருதா ? மக்களின் வாழ்க்கையில கொஞ்சம் தேறுதல்  வருதா ? வரல. இதை வர வைக்கணும்னா ஒரே வழி இருக்கு. என்ன வழி ?  விவசாயி-க்கு ஓட்டு போடணும் என தெரிவித்தார்.