தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் நாடே  வியந்து பார்க்கும் வகையிலான ஒரு ‘திரில்லர்’ வெற்றி கிடைத்துள்ளது.

திமுகவின் சீனியர் அமைச்சரும், பலமுறை வென்ற அரசியல் ஜாம்பவானுமான பெரியகருப்பனை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதி, வெறும் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளார். சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகளும், அமைச்சர் பெரியகருப்பன் 83,364 வாக்குகளும் பெற்றுள்ள நிலையில், இந்த முடிவால் ஒட்டுமொத்த தேர்தல் மையமும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

“ஒவ்வொரு வாக்கும் முக்கியம்” என்பதற்கு உதாரணமாக அமைந்த இந்த வெற்றி, தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ‘ட்விஸ்ட்’ ஆக மாறியுள்ளது. அமைச்சரை வெறும் ஒரு ஓட்டில் தவெக வேட்பாளர் வீழ்த்தியிருப்பது சிவகங்கை மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.