
தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இப்போது அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை கிலோ 25க்கும், துவரம்பருப்பு பாமாயில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் UPI மூலம் பணம் பெறும் திட்டத்தை ‘மொபைல் முத்தம்மா’ என்ற பெயரில் செயல்படுத்தி வருகிறது.
மொத்தம் உள்ள 35,000 ரேஷன் கடைகளில் தற்போது 9,000 கடைகளில் QR கோட் பொருந்திய மெஷின்கள் உள்ளன. அதனை ஸ்கேன் செய்து GPay, PhonePe, PayTM மூலம் பணம் செலுத்தலாம். அதன் நீட்சியாக மேலும் 20,000 கடைகளில் மெஷின்களை பொருத்த டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து கடைகளிலும் அமலாகும்.