ரேஷன்கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு மேலும் குறைத்துள்ளது.

நடப்பு மாதத்தில்(ஏப்ரல்) தமிழ்நாட்டின் மொத்த தேவையில் வெறும் 7% மட்டுமே மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, ரேஷன் கடைகளில் சரியாக மண்ணெண்ணெய் வழங்குவது இல்லை என்று மக்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், தற்போது மத்திய அரசு மண்ணெண்ணெய் விநியோகத்தை குறைத்திருப்பது, மேலும் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கும் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைத்துள்ளது. தற்போது ஒன்பதாயிரம் லிட்டர் மண்ணெண்ணெய்தேவை உள்ளது. இதனை மத்திய அரசு வழங்கு வதில்லை. எனவே மத்திய அரசு உடனடியாக முறையாக மண்ணெண்ணெய் அளவை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் மண்ணெண்ணெய் பற்றாக்குறையைப் போக்க மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.