சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டபடி பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் ஆனது தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பெண்கள் இந்த பேருந்து வசதியை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே தமிழகத்தில் எரி பொருட்களின் விலை அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதால் இலவச பேருந்து திட்டத்தினால் ஒரு நாளைக்கு மட்டுமே தமிழக அரசுக்கு பல கோடி நஷ்டம் ஏற்படப்படுகிறது. இதனால் மகளிருக்கான இலவச பேருந்துகளுடைய எண்ணிக்கை குறைக்கப்படுமா? எனவும், இந்த திட்டமானது கைவிடப்படுமா? எனவும் பல்வேறு கேள்விகள் எழுந்து வருகிறது.

அதுமட்டுமின்றி தமிழக போக்குவரத்து கழகம் தனியார் மயமாக்கபடுவதகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் இது குறித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அதாவது மகளிர்கான இலவச பேருந்து நடப்பாண்டில் மட்டும் 2500 கோடிக்கு பேருந்துகள் வாங்குவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் ஒருபோதும் அரசு போக்குவரத்து கழகம் தனியார் மயமாக்கப்படாது என தெளிவுபடுத்தியுள்ளார்.