தமிழகத்தின் நியாய விலை கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். அது மட்டும் இன்றி ரேஷன் அட்டைகள் மூலமாக நிதி உதவி திட்டங்களும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் சீனிக்குப் பதில் பனங்கருப்பட்டி வழங்கப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். “என் மண் என் மக்கள்” என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ள அண்ணாமலை பரமக்குடியில் இன்று தனது யாத்திரையை நிறைவு செய்தார். பரமக்குடியில் பேசிய அவர், ‘தமிழகத்தில் கள்ளுக்கடை திறக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது’ என கூறினார்