தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை, 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்தது.  இத்திட்டம் செப்.15-ம் தேதி தொடங்கப்படுகிறது. இத்திட்டத்துக்கான முதல்கட்ட விண்ணப்பப் பதிவு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அடுத்தகட்ட விண்ணப்பப் பதிவு பணிகள் செப்.5-ம் தேதி தொடங்கப்படுகிறது. இத்திட்டத்துக்காக பட்ஜெட்டில் ரூ.7 ஆயிரம் கோடியை தமிழக அரச ஒதுக்கியுள்ளது.

ரூ.1000 மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் கொடுக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக ஆதிதிராவிடர் சிறப்பு உட்கூறு நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இது அரசுக்கு புது தலைவலியாக மாறியுள்ளது. இதுதொடர்பாக விளக்கமளிக்கும் வரை, ரூ.1000-க்கான விண்ணப்பம் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என கூறப்படுகிறது