தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் ஊழியர்கள் சில நேரங்களில் விருப்பமில்லாத பொருட்களை வாங்க சொல்லி மக்களை வற்புறுத்துவதாக புகார் அளித்துள்ளது.அதாவது அரிசி மற்றும் பருப்பு போன்ற பொருட்களை தவிர உப்பு மற்றும் சோப்பு உள்ளிட்ட மற்ற பொருட்களை விற்பனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடு அற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில் பாமாயில் விற்பனை செய்யப்படுவதாகவும் அதனை வாங்க சொல்லி வற்புறுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது. அதே சமயம் இந்த பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்ற வதந்தியும் பரவி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி இந்த செய்தி உண்மையில்லை என்றும் போலி ரேஷன் கார்டு மட்டுமே ரத்து செய்யப்படும் என்றும் மற்ற மாநிலங்களில் மத்திய பாதுகாப்பு விதிகளின்படி குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே ரேஷன் பொருட்களை வாங்க முடியும். ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான அனைவரும் ரேஷன் பொருட்கள் வாங்கலாம். ரேஷன் கடையின் பெயரே நியாய விலை கடை என்பதால் அநியாயமாக பொருட்கள் விற்கக் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.