தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் வசதிக்காக அரசு அவ்வபோது பல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் தற்போது தமிழகத்தில் விண்ணப்பித்த 15 நாட்களில் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெட் பேங்கிங் மூலம் 45 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் வீடு தேடி ரேஷன் கார்டு வரும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். நாட்டிலேயே முதல்முறையாக கோவை, நீலகிரி, குமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ரேஷன் கடைகள் மூலமாக தேங்காய் எண்ணெய் வழங்க திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.