
மத்திய அரசு நாட்டில் மண்ணெண்ணெய் அளவை குறைப்பதற்கு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு மொத்தமாக ஒன்பதாயிரம் கிலோ லிட்டருக்கு மேல் மண்ணெண்ணெய் தேவைப்படுகின்றது. ஆனால் தற்போது 2,012 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே மத்திய அரசு வழங்கி வருகின்றது.
இது தொடர்பாக மத்திய அரசுக்கு இரண்டு முறை கடிதம் எழுதி இருக்கிறது. ஆனால் அரசு அதனை கருத்தில் கொள்ளாமல் இருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு 7510 கிலோ லிட்டர் இருந்த மண்ணெண்ணெய் கடந்த வருடம் 4000 கிலோ மீட்டர் ஆக குறைக்கப்பட்டது. இதனால் மக்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகம் செய்வதிலும் சிக்கல் இருந்து உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.