தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. அதன்படி இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இடி மின்னலுடன் கூடிய மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேக காற்றுடன் இன்று திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், தேனி, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இதேபோன்று நாளை முதல் மே 23ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உளளது. மேலும் சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.