தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ள பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இன்று காலை 10 மணி வரையில் தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், அரியலூர், நாகப்பட்டினம், கோயம்புத்தூர் மற்றும் தென்காசி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் சென்னை, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.