தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மின்வாரியம் பெயரில் குறுஞ்செய்தி வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மின்வாரியம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது மின் கட்டணம் செலுத்தாததால் உங்களது மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மின்வாரியம் பெயரில் உங்களது மொபைலுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அதன் மூலம் பணம் மோசடி செய்து விடுவார்கள் என்பதால் மின்வாரியம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.

 

இவ்வாறு ஏதாவது குறுஞ்செய்தி வந்தால் பதட்டம் அடைய வேண்டாம் எனவும் அந்த எண்ணை தொடர்பு கொள்வதோ அதில் உள்ள லிங்கை கிளிக் செய்வதோ வேண்டாம் எனவும் உடனடியாக 1930 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்க வேண்டும் என்று மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.