தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அனைத்து மருத்துவமனைகளும் 100% முக கவசம் கட்டாயம் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 303 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனைக்கு பிறகு பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், பொது இடங்களில் முக கவசம் அணிவது அவசியம். தமிழகத்தை தவிர எந்த மாநிலத்திலும் முக கவசம் அணிய அறிவுறுத்த வில்லை. தமிழகத்தில் கிளஸ்டர் பாதிப்பாக கொரோனா இன்னும் மாறவில்லை. இருந்தாலும் கொரோனா வழிகாட்டுதல்களை மக்கள் அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் முக கவசம் கட்டாயம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.