தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே சமயம் இன்று முதல் நான்கு நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்பதால் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியோர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் கோடை வெப்பத்தின் பாதிப்பை தவிர்க்க டீ, காபி, செயற்கை குளிர் பானங்கள், மது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். மேலும் பழங்கள் மற்றும் நீர், மோர் போன்றவற்றை சாப்பிடலாம் . காலை 11 மணி முதல் பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் தமிழக மக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.