தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் மே மாதம் கத்திரி வெயில் எனும் அக்கினி நட்சத்திரம் தொடங்கியதால் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெயில் கொளுத்தி எடுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வருகின்ற ஜூன் நான்காம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் 3 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்புள்ளது. சில இடங்களில் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும். எனவே வெயில் நேரத்தில் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியோர்கள் வெளியே வர வேண்டாம் எனவும் வெளியே சென்றாலும் அடிக்கடி தண்ணீர் மற்றும் மோர் ஆகியவற்றை குடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.