தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் 3,093 பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க தமிழக அரசே நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் கல்வி உதவித் தொகையை பெற விருப்பம் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் சென்று உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் இந்த உதவி தொகை விண்ணப்பிக்க டிசம்பர் 31 கடைசி நாள் என்பதால் உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள். கடந்த ஆண்டும் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்த மாணவர்கள் மீண்டும் விண்ணப்பத்தை புதுப்பித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.